Saturday, August 7, 2010

பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள் - tamil

*பாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்!!!!!*
இது ஒரு சீரியஸ் பதிவு! (இப்படி சொன்னாதான் சிரிப்பீங்கன்னு தெரியும்...)

1. கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா
இருக்காங்களளளாம்!)

2.வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள
ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு
போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

3. கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு
போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம்
மாதிரி.. இதுல இதுவேறையா?)

4.குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே
அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த
வாசனையே போகும்னா பாத்துகோங்க!)

5.கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல,
மேகம் தெளிவா இருக்கும்போதே!)

6.சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே
இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான்
போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

7. எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!,
வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு
பண்ணுவாங்க..

8 தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு
சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான்
பார்போம்ங்கறது வேற விசயம்!!)

9."செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா..
"மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது,
"ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற
ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க!

10.சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா,
சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ"
இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது!

11.சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம்
இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது!
(வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்..
ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

12.வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல
உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும்
குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது..
(யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க
பேருக்கு எழுதி வைக்கல!)

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு...
எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல
இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!!

(மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு
முன்னாடி, நானே ஒத்துகுறேன் மக்களே!!)

 *O M Basul Ashab,** *
 *Planning Engineer,*
*Al Jaber Trad. & Cont. WLL,*
*Qatar*

--
http://www.co5.in/
Continue Reading

Bachelors life - tamil

கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா  மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு
பீலிங் வருது..

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி
சொல்லிட்டு,அவங்க Kitchen  உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு
அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு
அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா  விட்ற கூடாது.....என் அம்மா.. டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா  காச சேர்த்து வை...என் அப்பா..சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு
...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு
மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல
சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....25  27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை  லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி
கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த
கல்யாணத்துல....முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க
வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....


பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க  துணிய அடுகிக்குவாங்க‌...உங்க
பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ்
போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட
மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு
நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்...  (இது அடிமையாகுதலின்
முதல் கட்டம்...)அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல
நடக்கும்...
(அவங்க  கூட படிச்ச  வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா
குடுப்பாங்க‌...)மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க  வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம்
அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து  டேரா போன்ற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட  பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க... ஆறு மாசம் ஓடிடும்...

 அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம
எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும்  நினைவுகளா மட்டுமே
இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி
இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட்
ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு
பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார்   இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...


வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..


நீங்க என்ன நெனைக்கறீங்க...
இப்படிக்கு....

bachelor life ஐ ரசித்து ருசித்து என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன் R JEYASITHAR

--
http://www.co5.in/
Continue Reading

Tuesday, August 3, 2010

Thaskara Lahala - Run away from 'Thaskara Lahala'

If you are to find some more reasons for why Mollywood is facing a big crisis, with very few viewers ready to take what is churned out in the name of cinema, just go and watch 'Thaskara Lahala'. I bet that once you are with this kind of films, except the reviewer folks, none will dare to visit any other cinema halls running Malayalam movies for at least three months.

A better prescription instead of ultimate punishments, the apex bodies in the film industry must make amendments to punish those who try to fool and disinterest active viewers by creating such bad flicks.

A mismatch of disjointed sequences pasted together in the name of a movie, 'Thaskara Lahala' intended to be a comedy is a acute mayhem with no such storyline or scripts. Directed (or misdirected) by Ramesh Das, we won't see any logic in creating such a movie and constantly wonder who could be the supposed target audience of such a film, when someone plans to make one. With not a single moment to evoke laughter, the efforts for giggles here are quite brutal that 110 minutes of running time seems like more than a day.

The movie is all about four youngsters namely Manikanthan (Suraj), Ayyappan (Salimkumar), Maimunni (Jaffer Idukky) and Govindan Kutty, once obsessed with stage-plays in a village named Kurukkanthara. But some events force them to flee from the village and to attempt petty thefts for a living. If you are given a notion that from the movie's posters Suraj Venjaramoodu is the hero of this film, you will actually see a number of actors like Salim Kumar, Jaffer Idukki, Lakshmi Sharma, Sajitha Beti, Bheeman Reghu, Geetha Vijayan, Thesni Khan are some more unknown actors let loose before the camera to do what all they please. There seems to be very few in the crew who know how to make a movie worth watching.

Ramesh Das, who made a serious film 'Thattakam' a decade ago can stoop in shame and can rework on his basics of making movies. Only a couple of songs by Shyam Dharman appear good to ears (including the Jassie Gift song 'Parunthe', but are ridiculously pictured.

A movie that leaves you stumbled, 'Thaskara Lahala' is one bereft of any ideas, that leaves you dumb folded with no idea of what to do. An able contender for one of the worst movies of the year, avoidance of this can be a big service from you towards thinking Mollywood.--
http://www.co5.in/
Continue Reading
 

Complete Online Solution | Make the internet world into your hands Copyright © 2009 Community is Designed by CO5 | Web designing | Web hosting